Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு
தற்போதைய செய்திகள்

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

Share:

கிள்ளானில் புகழ்பெற்ற கிள்ளான் பாப்புலர் ரெசிபி எனப்படும் கே.பி.அர் உணவகம், தனது 24ஆம் ஆண்டு உணவு விழாவை கடந்த வாரம் வெகுசிறப்பாக நடத்தியது. எண். 17/1A & 19 1A, ஜாலான் டேலிமா 18/KS9, பண்டார் பார்க்லேண்ட்ஸ், கிள்ளான் என்ற முகவரியில் உள்ள கே.பி.அர்-ரின் டைனமிக் ஈவென்ட் ஹால்- லில் இந்த உணவு பெருவிழா நடைபெற்றது.

திரு. கண்ணுசாமி மற்றும் திருமதி மகேஸ்வரி தம்பதியரால் 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கே.பி.அர், வாடிக்கையாளர்களின் பேராதரவால் தற்போது பல்வேறு உணவகங்கள், கேஃபே - க்கள் மற்றும் நிகழ்வு மண்டபங்களுடன் விரிவடைந்துள்ளது.

24 ஆண்டுகால பயணத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைத் தனது பலமாகக் கொண்டு வளர்ந்து வரும் கே.பி.அர், உணவு வழங்கும் நிறுவனமாக மட்டுமின்றி, தரம், சுவை மற்றும் சேவையில் தனக்கென ஓர் அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தனது உணவு அனுபவத்தைப் புதுப்பித்து வரும் கே.பி.அர் , பாரம்பரிய சுவைகளுடன் நவீன உணவு அணுகுமுறையையும் இணைத்து வருகிறது.

2026 ஃபுட் ஃபீஸ்டா,கே.பி.அர்-ன் கடந்த கால வெற்றிகளை கொண்டாடுவதோடு, அதன் எதிர்கால வளர்ச்சிக்கான பாதையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

இந்த 2026ஆம் ஆண்டுக்கான உணவு விழாவில் 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, 70 வகையான உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர் என்று கே.பி.அர் மார்கெட்டிங் தலைவர் திவ்யா கண்ணுசாமி தெரிவித்தார்.

ஓர் உணவகமாகத் தொடங்கிய KPR, வாடிக்கையாளர்களின் அபரிமிதமான ஆதரவால் படிப்படியாக விரிவடைந்து, பல்வேறு உணவு சேவைகளுடன் வளர்ச்சி கண்டுள்ளதாக அதன் செயலாக்க நிர்வாகி கண்ணன் உத்திராபதி தெரிவித்தார்.

விழாவில் பரிமாறப்பட்ட ஒவ்வொரு உணவும் தனித்துவமான சுவையுடன் இருந்ததாக வாடிக்கையாளர் ஐஸ்வர்யம் வெள்ளச்சாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தது தமக்கு அறுசுவை விருந்தாக அமைந்ததாக பிஏசி வேர்ல்டுவைட் ஆசியா நிறுவனத்தை சேர்ந்த அனிஸ் நபிலா மஸ்லான் குறிப்பிட்டார்.

தாம் ஒரு சைவ உணவுப் பிரியர் என்றும், முதன்முறையாக கே.பி.அர் உணவகத்திற்கு வருகை தந்திருந்தாலும், அங்கு பரிமாறப்பட்ட ஒவ்வொரு சைவ உணவு வகையும் தனித்துவமான சுவையை வழங்கியதாகவும் வாடிக்கையாளர் ஆதிலெட்சுமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

70 வகையான உணவுகள் இடம்பெற்றிருப்பது நேரில் பார்த்தபோதுதான் தமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக வாடிக்கையாளர் சுரேஷ் தேவசகாயம் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் தொடர்ந்து விரிவடைந்து வரும் கே.பி.அர், தரமே தங்களின் முதன்மை இலக்கு என்ற கொள்கையுடன் தனது பயணத்தைத் தொடர்கிறது.

24 ஆண்டுகளைக் கடந்த கே.பி.அர்-ன் இந்தப் பயணம், வாடிக்கையாளர் நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்ட வெற்றிப் பயணமாகத் தொடர்கின்றனர்.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவராக ஜே.அருள்குமார் தேர்வு

நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவராக ஜே.அருள்குமார் தேர்வு

தாபோங் ஹாஜி அர்.சி.ஐ  அறிக்கை குறித்த விவாதம்: நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புக் கூட்டம்

தாபோங் ஹாஜி அர்.சி.ஐ அறிக்கை குறித்த விவாதம்: நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புக் கூட்டம்