Mar 15, 2026
Thisaigal NewsYouTube
காதலியை கொலை செய்த திருநம்பிக்கு 10 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

காதலியை கொலை செய்த திருநம்பிக்கு 10 ஆண்டு சிறை

Share:

புத்ராஜெயா,ஜன.11
ஓரின சேர்க்கை கொண்டவர் என்று நம்பப்படும் திருநம்பி ஒருவர், தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ரத்து செய்தது.

38 வயதுடைய சி. சொம்சிட் என்ற திருநம்பிக்கு எதிரான கொலை குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் விதித்தது.

திருநம்பிக்கு எதிரான கொலை குற்றச்சாட்டு, நோக்கமில்லா குற்றச்சாட்டாக பிராசிகியூஷன் தரப்பு திருத்தம் செய்ததைத் தொடர்ந்து மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹடாரியா ஷெட் இஸ்மாயில் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.

தன்னுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த தனது காதலியான 29 வயதுடைய சுரியாத்தி மாட் சாட் என்ற 29 வயதுடைய பெண், வேறு ஓர் ஆடவரை திருமணம் செய்து கொள்வதற்கு உடன்பட்டதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்தப் பெண்ணை, கத்தியால் பல முறை குத்தி கொலை செய்ததாக திரு நம்பிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்து வம்சாவளியினரை பூர்வீகமாக கொண்ட ஒரு மலேசியரான திருநம்பி, கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி கெடா, சுங்கை பட்டாணி, தாமான் செமாராக்கில் உள்ள ஒரு வீட்டில் புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்