Dec 4, 2025
Thisaigal NewsYouTube
68 கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி 9 வெள்ளி 40 காசுக்கும் அதிகமாக விற்பனை
தற்போதைய செய்திகள்

68 கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி 9 வெள்ளி 40 காசுக்கும் அதிகமாக விற்பனை

Share:

68 கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி 9 வெள்ளி 40 காசுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் இடைக்கால அமைச்சர் அர்மிசான் அலி தெரிவித்தார்.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் 1,484 கடைகளில் மேற்கொள்ளப்படக் கண்காணிப்பின் அடிப்படையில் இவ்விவகாரம் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.

அதே சமயம், மெர்சிங்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஒரு கிலோ கோழி இறைச்சி 6 வெள்ளி 49 காசுக்கு மிகக் குறைவான விலையில் விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மிக அதிகமாக பகாங், ரொம்பின் சந்தையிலும் திரக்கானு மனிர் சந்தையிலும் ஒரு கிலோ கோழி இறைச்சி 11 வெள்ளிக்கு விற்கப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

உணவுப் பொருட்களின் விலையை கண்காணிக்க அமலாக்க அதிகாரிகள் அதிகரிக்கப்பட அமைச்சு எண்ணம் கொண்டிருப்பதாகவும் அர்மிசான் கூறினார்.

Related News