Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் ஒரு கோடி வெள்ளி வசூலை
தற்போதைய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் ஒரு கோடி வெள்ளி வசூலை

Share:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் 5 நாட்களில் ஒரு கோடி வெள்ளி வசூலை எட்டியுள்ளதாக அப்படத்தின் விநியோகஸ்தரான வவ் ஸ்தார் திரேடிங் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 11.15 க்கு தொடங்கி, மறுநாள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 11 மணி வரை பெட்டாலிங் ஜெயா, லோட்டஸ் வவ் ஸ்தார் சினிமா பிஜே ஸ்தேட் திரையரங்கில் இடைவிடாமல் திரையீடு கண்டு, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 26 மணி 59 நிமிடங்களுக்கு இடை விடாமல் ஜெயிலர் திரையீட்டின் மூலம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற முதலாவது தமிழ்ப்படம் என்ற பெருமைக்கான அங்கீகாரம் வவ் ஸ்தார் திரேடிங் மற்றும் லோட்டஸ் வவ் ஸ்தார் க்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

Related News