Jul 22, 2026
Thisaigal NewsYouTube
டிகிகேஎல் பணியாளர் விவரங்கள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்: ஹன்னா இயோ
தற்போதைய செய்திகள்

டிகிகேஎல் பணியாளர் விவரங்கள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்: ஹன்னா இயோ

Share:

மாநிலத் தேர்தல் பிரச்சார சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிகிகேஎல்-இன் பணியாளர் அமைப்பு குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.

வாட்ஸ்அப் வழியாக பரவி வரும் தகவல் ஒன்றில், டிகிகேஎல் வெறும் 7 இந்தியர்களும், 1 சீனர் மட்டுமே பணியாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும், டிகிகேஎல்-இன் உண்மையான பணியாளர் விவரங்களை அது பிரதிபலிக்கவில்லை என்றும் ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, டிகிகேஎல் மொத்தம் 9 ஆயிரத்து 131 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் 490 இந்தியர்களும், 22 சீனர்களும் இடம்பெற்றுள்ளனர் என்று ஹன்னா இயோ விளக்கமளித்துள்ளார்.

அதேவேளையில், மேலாண்மை மற்றும் தொழில்முறை பிரிவில் தற்போது 10 இந்திய அதிகாரிகளும், 2 சீன அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், டிகிகேஎல்-இல் அனைத்து இனங்களின் பிரதிநிதித்துவத்தையும் மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஹன்னா இயோ உறுதியளித்துள்ளார்.

Related News

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாதுகாப்பு தீவிரம் - 143 விண்ணப்பங்களில் 141-க்கு போலீஸ் அனுமதி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாதுகாப்பு தீவிரம் - 143 விண்ணப்பங்களில் 141-க்கு போலீஸ் அனுமதி

இஸ்ரேலியர்களை நாடுகடத்தும் விவகாரம் / மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இஸ்ரேலியர்களை நாடுகடத்தும் விவகாரம் / மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை – பொருளாதார அமைச்சு

சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை – பொருளாதார அமைச்சு

பூச்சோங் மருத்துவமனையில் வெடிகுண்டு புரளி – போலீஸ் விசாரணை

பூச்சோங் மருத்துவமனையில் வெடிகுண்டு புரளி – போலீஸ் விசாரணை

சகோதரரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்துடன் தொடர்பில்லை – அசாம் பாக்கி உறுதி

சகோதரரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்துடன் தொடர்பில்லை – அசாம் பாக்கி உறுதி