ஜார்ஜ்டவுன், ஜனவரி.24-
இன்று சனிக்கிழமை பினாங்கு, குளுகோர், ஜாலான் காக்கி புக்கிட் பகுதியில் மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்தன.
காலை சுமார் 11.32 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், புரோடுவா ஆக்சியா மற்றும் Nissan Grand Livina ஆகிய கார்கள் பாதிக்கப்பட்டன.
எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த மீட்புப் பணியில் 10 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். முழுமையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்தைப் ஆய்வு செய்த பின்னர், சங்கிலி ரம்பங்களைப் பயன்படுத்தி விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








