பேரா, கம்பாரில் உள்ள கிந்தா ஆற்றின் கரை ஓரத்தில் தேங்கிக் கிடந்த குப்பைக் கூளங்களின் மத்தில் ஆடவர் சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் நேற்று மாலை 4.00 மணி அளவில் சுத்தம் செய்து கொண்டிருந்த 39 வயது சொங் வாய் கீ யின் சடலம் ஒதுங்கி இருப்பதை பொது மக்கள் கண்டறிந்தனர்.
அவ்வாடவரின் சடலத்தை மீட்புப் படையின் கரைக்குக் கொண்டு வந்ததாகவும் சடலத்தின் குற்றச் செயல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் நிலையில் காயங்கள் ஏதும் இல்லை என கம்பார் மாவட்டக் காவல் துறை தலைவர் சுபெரிதென்டன் முஹமாட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் அவ்வாடவரின் அடையாளம் கண்டறியப்பட வில்லை.
அவ்வாடவர் அணிந்திருந்த 'My Love, Your Love' எனக் குறிப்பிட்டு ஒரு மோதிரம், e & a எனக் குறிப்பிட்ட இன்னொரு மோதிரம், 'Cookkeng' எனும் எழுத்து கொண்ட கருப்பு நிற T சட்டை ஆகியவை அவ்வாடவரின் அடையாளம் அறியப்பட உதவி புரிந்ததாக முஹமாட் நஸ்ரி தெரிவித்தார்.
அதன் பிறகு, இறந்தவரின் குடும்பத்தாரை அழைத்து அவ்வாடவரின் அடையாளத்தை காவல் துறை உறுதிபடுத்தினர்.
முன்னதாக, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி, சொங் வாய் கீ காணாமல் போனதாக அவரின் குடும்பத்தார் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.
சொங் வாய் கீ ஆற்றில் மூழ்கியதால் மரணமடைந்ததாக கம்பார் மருத்துவமனையின் அடற்கூறாய்வு உறுதிப்படுத்தியதாக முஹமாட் நஸ்ரி குறிப்பிட்டார்.








