பெட்டாலிங் ஜெயா, ஜூலை.12-
கோலாலம்பூர் சிரம்பான் நெடுஞ்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில், மற்றொரு காரின் மீது மோதி தப்பியோடிய வெள்ளை நிற கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிகாலை 5.45 மணியளவில், பழுப்பு நிற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சுழன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னால் வந்த வெள்ளை நிற கார் அந்த வாகனத்தின் மீது மோதி, நிற்காமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பழுப்பு நிற காரில் பயணித்த 27 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்காரில் இருந்த 22 வயதுடைய இரு நபர்கள் காயங்களுடன் செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாஸ்ரோன் குறிப்பிட்டுள்ளார்.








