Aug 16, 2026
Thisaigal NewsYouTube
ரவாங்கில் சீன வழிபாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தற்போதைய செய்திகள்

ரவாங்கில் சீன வழிபாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Share:

ரவாங், ஜூலை.12-

சிலாங்கூர் மாநிலம் ரவாங்கில், சீன மக்களின் வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் ஜோஸ் பேப்பர் மற்றும் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சுமார் 200 அடி நீளமும் 300 அடி அகலமும் கொண்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில், கட்டிடத்தின் சுமார் 80 சதவிகிதப் பகுதி சேதமடைந்ததாக ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

மதியம் 1.01 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ரவாங் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்தில் உயிரிழப்போ, காயமோ எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related News