Aug 7, 2026
Thisaigal NewsYouTube
கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் காலமானார் - அன்வார் இரங்கல்
தற்போதைய செய்திகள்

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் காலமானார் - அன்வார் இரங்கல்

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

கத்தாரை பிராந்திய வல்லரசாக மாற்றிய முன்னாள் அமீர், Sheikh Hamad bin Khalifa Al Thani தமது 74-வது வயதில் காலமானார்.

கடந்த 1995 முதல் 2013-ஆம் ஆண்டு வரையில், கத்தாரை ஆட்சி செய்த அவர், பின்னர் தனது மகன் மற்றும் தற்போதைய அமீரான, Sheikh Tamim-மிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.

அவரது மறைவை கத்தாரின் அமிரி திவான் என்றழைக்கப்படும் அரசின் உயர்மட்ட நிர்வாக அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், Sheikh Hamad bin Khalifa Al Thani-யின் மறைவிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹமாத்தின் தலைமையில் கத்தார் பொருளாதார ரீதியாக முன்னேறி, உலக அரங்கில் செல்வாக்குமிக்க நாடாக உயர்ந்ததாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆட்சியை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைத்தது அவரது தொலைநோக்கு தலைமையின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ள அன்வார், அவர் மலேசியாவின் நெருங்கிய நண்பர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி