Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தினால், கிழக்குகரை ரயில் சேவைகள் பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தினால், கிழக்குகரை ரயில் சேவைகள் பாதிப்பு

நவ. 28-

கிழக்குகரை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினால் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின், நகரங்களை இணைக்கும் InterCity ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் இருப்புப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அகன்ற பள்ளங்கள் விழுந்துள்ளன. இதனால் ரயில் சேவை நிலைக்குத்தியுள்ளது.

குறிப்பாக, கிளந்தான், பாசீர் மாஸிற்கும், தானா மேராவிற்கும் இடையிலான ரயில் இருப்புப்பாதையின் 490 ஆவது கிலோ மீட்டரிலிருந்து 493 ஆவது கிலோ மீட்டரில் ரயில் இருப்பு பாதையில் நில அமிழ்வு ஏற்பட்டுள்ளதாக KTMB ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →