Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படாது

கோலாலம்பூர், ஜூன்.19-

தற்போது இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த நெருக்கடி காரணமாக மலேசியாவில் பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்படக்கூடும். இருப்பினும் மலேசியாவில் ரோன் 95 விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

விலை உயர்வானது, தேசிய பெட்ரோலிய நிறுவனத்திற்குப் பலன் அளிக்கும் என்றாலும் அதிக எரிபொருள் செலவுகளால் அதன் சுமை மக்கள் மீது திணிக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →