May 24, 2026
Thisaigal NewsYouTube
உஸ்தாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

உஸ்தாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு

Share:

மலக்கா, ஆகஸ்ட் 05-

தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவன் ஒருவனை பாலியல் பலாக்காரம் புரிந்ததாக உஸ்தாஸ் ஒருவர், மலாக்கா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

36 வயது அப்துல் ஹலீம் இஸ்மாயில் என்ற அந்த உஸ்தாஸ், நீதிபதி ரோஹத்துல் அக்மர் அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 18 ஆம் தேதி இரவு 10 மணியளவில் மலாக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், 11 வயது 9 மாதம் நிறைந்த அந்த தொடக்கப்பள்ளி மாணவனிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த உஸ்தாஸ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News