கோலாலம்பூர், நவ. 19-
நாட்டின் முன்னணி சங்கிலித் தொடர்பு வர்த்தக நிறுவனமான கேகே சூப்பர் மார்ட் ஆதரவுடன் KK GOJU-KAI சிலாங்கூர் பொது கராத்தே போட்டி, கடந்த 2008 ஆம் ஆண்டு 26 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் இன்று 430 பேர் பங்கேற்க்கூடிய அளவிற்கு மிகப்பெரிய போட்டி விளையாட்டாக உருவெடுத்துள்ளது.

இதற்கு கேகே சூப்பர் மார்ட் தோற்றுநரும், தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய் வழங்கி வரும் ஆதரவும், பெற்றோர்கள் அளித்த வருகின்ற ஒத்துழைப்புமே முக்கிய காரணமாகும் என்று சிலாங்கூர் Karate Do Goju Kai சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜே. சிதம்பரம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், சவுத் சிட்டி பிளாசாவில் 13 ஆவது ஆண்டாக நடைபெற்ற KK GOJU-KAI சிலாங்கூர் பொது கராத்தே போட்டி 2024 கின் நிறைவு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே. சிதம்பரம், இப்போட்டி விளையாட்டுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய் வழங்கி வரும் அதரவு, இதனை ஓர் அனைத்துலகப் போட்டியாக நடத்துவதற்கான உற்சாகத்தை தங்களுக்கு தந்து இருப்பதாக குறிப்பிட்டார்.

சுங்கை சோ தோட்டத்தில் பால்மரம் வெட்டும் தோட்டத் தொழிலாளியின் மகனாக வாழ்க்கையைத் தொடங்கியதாக சிதம்பரம் குறிப்பிட்டார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு கராத்தே தற்காப்பு கலையில் பயிற்சிப்பெற்ற பின்னர் தாம் கற்ற அக்கலையை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து, இன்று சிலாங்கூர் Goju Kai கராத்தே சங்கம், தோற்றம் காணும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
6 க்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களுக்கான போட்டியில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கணிசமான அளவில் பங்கு கொண்டு, தங்கள் திறனை வெளிப்படுத்தி, இப்போட்டி விளையாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.

தமது பெற்றோர் குணசேகரன் – ஜெயந்தி வழங்கிய ஆதரவின் காரணமாகவே இப்போட்டியில் தங்கப் பதக்கம் பெற முடிந்ததாக பண்டார் மாக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவன் யுகேந்திரன் தெரிவித்தார்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவன் கார்த்திகேயன் கூறுகையில், GOJU-KAI கராத்தே போட்டியில் திறன் அடிப்படையில் முதலாவது பரிசைப் பெற்றதாக குறிப்பிடுகிறார்.
14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவும், 6 க்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களுக்கு ஒரு பிரிவும், இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற KK GOJU-KAI சிலாங்கூர் பொது கராத்தே போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும், பொது மக்களும் திளராக கலந்த கொண்டு போட்டியை பெருமை சேர்த்தனர்.








