கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ நளினி பத்மநாபன், மாமன்னரின் அதிகாரத்துவ பிறந்த விழாவை முன்னிட்டு டான்ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் 63 வயதான நளினி பத்மநாபனுக்கு மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தில் உளவியல்துறையில் பட்டம் பெற்றவரான நளினி பத்மநாபன் கடந்த 1984 ஆண்டு லண்டன் வழக்கறிஞர் மன்றத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார். மலேசிய நீதித்துறையில் உயர் நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம் ஆகியவற்றில் ஒரு நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமை நளினி பத்மநாபனையே சேரும்.
கடந்த 2007 ஆம் ஆண்டு நீதித்துறை ஆணையாளராக நியமிக்கப்பட் நளினி பத்மநாபன், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற வேளையில் 2014 ஆம் ஆண்டு அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு மலேசிய நீதிபரிபாலனத்துறையில் உச்சநீதிமன்றமான கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நளினி பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டட 12 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதிபடுத்திய ஐவர் அடங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளில் நளினி பத்மநாபனும் ஒருவர் ஆவார். நீதித்துறை தொடர்பாக அதிகமான நூல்களையும் நளினி பத்மநாபன் எழுதியுள்ளார்.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


