செர்டாங், செப்டம்பர்
ஒரு வாரத்திற்கு முன்பு, சிலாங்கூர், பத்தாங் காலி, சுங்கை கெடொண்டோங்கிற்கு பொழுதுபோக்கிற்காகச் சென்ற ஆகாயப் படை வீரர் ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
27 வயதுடைய அம்மார் அரிஃபின் என்ற அந்த ஆகாயப் படை வீரர், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் தமது மூன்று நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஃபாரிட் அஹ்மாட் குறிப்பிட்டார்.








