Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் ஓபிஎஸ் டாடு அதிரடிச் சோதனை
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் ஓபிஎஸ் டாடு அதிரடிச் சோதனை

Share:

ஜோகூர் பாருவில் சட்டத்திற்குப் புறம்பான இணையவழி சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 21 பேரை ஓபிஎஸ் டாடு ஹாஸ் அதிரடிச் சோதனையின்போது கைது செய்யப்பட்டனர்.

சேற்று 20 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையில் 18 மலேசிய ஆடவர்கள், ஒரு வெளளிநாட்டு ஆடவர், இரு மலேசியப் பெண்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல் துறை தலைவர் டத்தோ கமாருல் சமான் மாமாட் தெரிவித்தார்.

இச்சோதனை கடந்த செப்டம்பர் 22 ஆம் நாள் முதல் நேற்று அக்டோபர் 3 ஆம் நாள் வரை 246 இடங்களில் நடத்தப்பட்டதில் 18 வயது முதல் 66 வயதுக்கு உட்பட்ட 228 ஆண்களும் 49 பெண்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது வரை 288 கைப்பேசிகள், 108 அச்சுப் பொறிகள், 51 ஆயிரத்து 574 வெள்ளி ரொக்கப் பணம் ஆகியவற்றை காவல்துறை கைப்பற்றி உள்ளதாக Kamarul Zaman குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காகக்த் தடுப்புக் காவலில் வைக்கக் கோரி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட இடங்கள் செயல்பட உரிமங்கள் இரத்து செய்யப்படவும் மின்சார இணைப்பும் துண்டிக்கப்படவும் ஊராட்சி மன்றத்திடமும் தெனாகா நேஷனல் பெர்ஹாட்டிடமும் அனுமதி கோரி இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து