மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தியதாக இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் ஓர் இந்திய ஆடவர், எதிர்வாதம் புரியும்படி சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
26 வயது எஸ். சிவசங்கரன் என்ற அந்த ஆடவர், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி ரந்தாவ், தாமான் ஸ்ரீ ரம்பாயில் 413.3 கிராம் கனபீஸ் போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
அபாயகர போதைப்பொருள் சட்டம் 39 B பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட சிவசங்கரனுக்கு எதிரான இரு குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி கண்டுள்ளதாக நீதிபதி டத்தின் ரொஹானி இஸ்மாயில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் சிவசங்கரன் சத்தியப்பிரமாண வாக்குமூலத்தின் கீழ் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று நீதிபதி ரொஹானி இஸ்மாயில் உத்தரவிட்டுள்ளார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


