Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் வீட்டில் வெளிநாட்டு ஆண் சடலம் – வெளிநாட்டு பெண் கைது
தற்போதைய செய்திகள்

கிள்ளான் வீட்டில் வெளிநாட்டு ஆண் சடலம் – வெளிநாட்டு பெண் கைது

Share:

கிள்ளான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டு ஆண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து நேற்று வியாழக்கிழமை மதியம் 3.15 மணியளவில் போலீசுக்கு தகவல் கிடைத்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயா ராவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொர்பாக 32 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கானது மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 302 -ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இசம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஜய ராவ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இக்கொலை சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் வதந்திகளை பரப்பாமல் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News