Sep 22, 2026
Thisaigal NewsYouTube
நஜீபிற்கு அரச மன்னிப்பு கோரும் விவகாரம் : அரசாங்கத்திற்கு நலன் சார்ந்த அம்சமில்லை
தற்போதைய செய்திகள்

நஜீபிற்கு அரச மன்னிப்பு கோரும் விவகாரம் : அரசாங்கத்திற்கு நலன் சார்ந்த அம்சமில்லை

Share:

முன்னாள் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கக் கோரி மாமன்னர் அப்துல்லாவிற்குச் சமர்பிக்கப்படும் விண்ணப்பத்தில் அரசாங்கத்தின் நலன் சார்ந்த அம்சங்கள் எதுவும் இல்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெளிவுப்படுத்துயுள்ளார்.

அதே வேளையில், இவ்விவகாரத்தில் தமது தலையீடு இருக்காது என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை விடுதலை செய்யக் கோரி யார் வேண்டுமானாலும் மாமன்னரிடம் அரச மன்னிப்புக் கோரி விண்ணபிக்க முடியும்.

இதில், அரசாங்க தலையீடும், அதன் நலன் சார்ந்த அம்சங்களும் இருப்பதாக பொருள்படாது.
எனவே, நஜீபை விடுதலை செய்வதற்கு அரச மன்னிப்புக் கோரப்படும் விவகாரத்தில் பலதரப்பட்ட நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது.

இது குறித்து தமது விவேகத்திற்கு உட்பட்டு இறுதி முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மாமன்னரின் கைகளில் இருப்பதாக பிரதமர் விளக்கினார்.
எனவே, இந்த நடைமுறைகள் குறித்து பொதுவில் விவாதிக்க வேண்டிய அவசிமில்லை என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்