கோலாலம்பூர், டிசம்பர்.02-
கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர், சாவ் கிட் பகுதியில் உள்ள ஒரு SPA (ஸ்பா) மையத்தில் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 208 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடப்பு சட்டத்தின் சில விதிமுறைகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்களின் ஒழுங்கீன நடவடிக்கையின் தொடர்புடைய சட்டங்களின் அமலாக்க ஒதுக்கீடுகள் குறித்து விரிவான முறையில் ஆராயப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கோலாலாம்பூர் அதிரடி போலீசார், சமய இலாகா அதிகாரிகள், கோலாலம்பூர் மன்ற அமலாக்க அதிகாரிகள், அந்த SPA மையத்தின் இரண்டு மாடிகளில் திடீர் சோதனையிட்ட போது 17 அரசாங்க ஊழியர்கள் உட்பட 208 பேர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.








