May 22, 2026
Thisaigal NewsYouTube
குண்டு வெடிப்பில் மலேசியர்ள் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

குண்டு வெடிப்பில் மலேசியர்ள் பாதிக்கப்படவில்லை

Share:

கர்நாடகா, மர்ச் 2 -

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே. உணவகத்தில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இன்று சனிக்கிழமை மதியம் வரை கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆராய்ந்துப் பார்த்ததில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டதாக இந்தியாவிற்கான மலேசிய தூதரகத்தின் சென்னை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த உணவகத்தில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

Related News