Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எட்டு நீர் அணைக்கட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

எட்டு நீர் அணைக்கட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Share:

கோடை வறட்சிக் காலத்தில் நீர் விநியோகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக ஆபத்தான ஏழு நீர் அணைக்கட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்துள்ளார்.

கெடா, சிக் கில் உள்ள பெடு, மூடா, அணைக்கட்டுகள் மலாக்காவில் உள்ள அசஹான் டுரியான் துங்கால் ஜூஸ் அணைக்கட்டுகள் பினாங்கில் உள்ள மெங்குவாங் அணைக்கட்டு, ஜோகூரில் உள்ள லிங்குல் ஆணைக்கட்டு ஆகியவையே அந்த 7 நீர் நிலைகளாகும் என்று சார்லஸ் சாண்டியாகோ சுட்டிக்காட்டினார்.

அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவின் திறன் செயல்பாடு குறைவாக இருப்பதே நீரின் மட்டம் குறைவதற்கு காரணமாக அமைகிறது என்று அவர் விளக்கினார்.

Related News