Dec 2, 2025
Thisaigal NewsYouTube
5 சிறார்கள் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

5 சிறார்கள் காப்பாற்றப்பட்டனர்

Share:

கோல லங்காட், டெலுக் பங்லீமா காராங்கில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில், கட்டாயத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த 5 சிறார்கள், புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தால் மீட்கப்பட்டனர்.

நேற்று மாலை 5.45 மணியளவில் புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தின், மனித கடத்தல் வர்த்தக துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், குத்தகைத் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்ட அந்த 5 சிறார்கள் காப்பாற்றப்பட்டதாக போலீஸ் தகவல் கூறுகிறது.

தவிர, பல்வேறு குற்றங்களுக்காக அந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 80 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News