கோலாலம்பூர், செப்டம்பர்.15-
அண்மையில் கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாருவில் நிகழ்ந்த மோதல் தொடர்பில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசாருக்கும், குடியிருப்பாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த மோதல் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாணைக்கு உதவும் பொருட்டு பாஸ் கட்சித் தலைவரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 186, 353 மற்றும் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி மேலும் கூறினார்.








