கடந்த வாரம் தனது 5 நண்பர்களுடன் கம்புங் டமாட் - கம்புங் லாகங் தொங்கும் பாலத்தை கடக்கும் பொழுது செஃபி எடுக்க முயன்ற 13 வயது இளையவர் ஒருவர் ஆற்றில் வழுக்கி விழுந்த நிலையில் அவரின் உடல் இன்று சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கம்போங் ருகோம் கடற்கரை பகுதியில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொங்கும் பாலத்தைக் கடக்கும் பொழுது, அந்த பாலத்தின் கயிற்றில் ஏறி புகைப்படம் எடுத்துகொள்ள நினைத்த அந்த 13 வயது இளையவர், வழுக்கி ஆற்றில் விழுந்த முதல் நாள் தொடங்ங்கி மீட்பு பணிகுழுவினரால் தொடர்ந்து தேடப்பட்ட உடல் இன்று கிடைத்ததாக துவரான் வட்டார தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழு நிலையத்தின் தலைவர் அப்துல் காவி அப்துல் கபார் தெரிவித்தார்.








