Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

Share:

மலாய் மற்றும் இந்திய சமுதாயத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசு சாரா அமைப்புகள், இரு சமூகங்களையும் சார்ந்த இனப் பிரச்சினைகள் அனைத்தும் விரைவாகவும் முழுமையாகவும் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற, பல NGO-கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் அமர்வில், இப்பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வை காண பேச்சுவார்த்தையே முக்கிய வழியாக இருக்க வேண்டும் என அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

அமைதியான தீர்வைக் காண்பதற்கான முயற்சியில் இச்சந்திப்பு மிக முக்கியமானது என்று மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் தெரிவித்தார்.

இன்றைய முயற்சிகள், மலாய் மற்றும் இந்தியச் சமூகங்களுக்கு இடையே ஓர் அமைதியான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் டத்தோ சிவக்குமார் குறிப்பிட்டார்.

மேலும், துல்லியமான தரவுகளைப் பெறுவதற்காக, பிரதமர் துறையின் கீழ் ஒரு சிறப்புக் குழுவை அமைப்பதும், வழிபாட்டுத் தலங்களையும் உள்ளடக்கிய ஒரு நிலத் தணிக்கையை மேற்கொள்வதும் இச்சந்திப்பில் முன்மொழியப்பட்ட யோசனைகளில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜைனுல் ரிஜால் அபு பக்கர் கூறுகையில், இந்த கலந்துரையாடலானது இரு சமூகத்தினரும் வெளிப்புற தாக்கம் இன்றி நேரடியாக உரையாட ஒரு மேடையாக அமைந்தது என்றார்.

தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகளை சமாளிக்க தாங்கள் முயற்சி செய்து வருவதாகவும், மூன்றாம் தரப்பினரின் தூண்டுதல்களுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக இது போன்ற நேரடிப் பேச்சுவார்த்தையே சிறந்தது என்றும் தெரிவித்தார்.

புத்ரா ஜெயா பன்னாட்டு மாநாட்டு மைய வளாகத்தில், ‘மதானி ஒற்றுமை’ திட்டத்தின் கீழ் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் முகமது ஜம்ரி வினோத், சமூக ஆர்வலர் சிக்கு சந்திரா, சமய போதகர் ஃபிர்தௌஸ் வாங், சமூக ஊடகப் பிரபலங்களான குமரேசன் ஜோதி, சந்தனார் துரோணாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை