பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.01-
தனது கைப்பேசியில் ஆபாசப் படங்கள் உள்ளடக்கம் மற்றும் ஆபாசப் படக் காணொளிகளை வைத்திருந்த குற்றத்திற்காக லோரி உதவியாளர் ஒருவருக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
32 வயது எஸ். தனராஜ் என்ற அந்த லோரி உதவியாளர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுவாரேயானால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் ஷாரில் அனுவார் அஹ்மாட் முஸ்தஃபா தீர்ப்பு அளித்தார்.
கடந்த நவம்பர் 23 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் மஸ்ஜிட் உத்தாமாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் தனராஜ் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தனராஜ் குற்றஞ்சாட்டப்பட்டார்.








