Oct 26, 2025
Thisaigal NewsYouTube
LPT2 நெடுஞ்சாலையில் கார் விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததில் 23 வயது இளைஞர் பலி!
தற்போதைய செய்திகள்

LPT2 நெடுஞ்சாலையில் கார் விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததில் 23 வயது இளைஞர் பலி!

Share:

கெமாமான், அக்டோபர்.26-

கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலை 2 - LPT2, பெராசிங் ஓய்வெடுக்கும் பகுதிக்கு அருகிலுள்ள 260.1 கி.மீ தூரத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட கோர விபத்தில் முகமட் அமிருல் ரிஸுவான் அஸ்மி என்ற 23 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குவாந்தானிலிருந்து கோலா திரெங்கானு நோக்கிச் சென்று கொண்டிருந்த அவர் ஓட்டிச் சென்ற பெரோடூவா மைவி கார், கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையின் இடதுபுறத்தில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.

இவ்விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கெமாமான் மாவட்டக் காவற்படையின் தலைவர், சுப்ரிண்டெண்டன் முகமட் ராஸி ரொஸ்லி உறுதிப்படுத்தியதும், காரில் சிக்கியிருந்த அவரது உடலைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டதாகக் குறிப்பிட்டார். இச்சம்பவம் குறித்து 1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் காவற்படை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Related News

டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: "காஸாவுக்கு விடுதலை" என முழக்கமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்!

டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: "காஸாவுக்கு விடுதலை" என முழக்கமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்!

அனுபவமே கல்வி: எஸ்பிஎம் முடித்த இலட்சக்கணக்கானோரின் திறமையை அங்கீகரிக்கும் 'APEL' திட்டம்!

அனுபவமே கல்வி: எஸ்பிஎம் முடித்த இலட்சக்கணக்கானோரின் திறமையை அங்கீகரிக்கும் 'APEL' திட்டம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 பள்ளிகள்: மாணவர்களுக்கு 2 நாட்கள் 'வீட்டிலிருந்தே கற்றல் - கற்பித்தல்'!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 பள்ளிகள்: மாணவர்களுக்கு 2 நாட்கள் 'வீட்டிலிருந்தே கற்றல் - கற்பித்தல்'!

இன்ஃபுளுவென்ஸா பாதிப்பு உயர்வு: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

இன்ஃபுளுவென்ஸா பாதிப்பு உயர்வு: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

கார்ப்பரேட் உடையுடன் வந்த 6 பேர்: "உண்மையான சுற்றுலாப் பயணிகள் இல்லை" எனக் கூறி வங்காளதேசிகளைத் திருப்பி அனுப்பிய எல்லைக் காவற்படை!

கார்ப்பரேட் உடையுடன் வந்த 6 பேர்: "உண்மையான சுற்றுலாப் பயணிகள் இல்லை" எனக் கூறி வங்காளதேசிகளைத் திருப்பி அனுப்பிய எல்லைக் காவற்படை!

வெள்ளத்தைச் சாதாரணமாகக் கருத வேண்டாம்: துணைப்பிரதமர் நினைவுறுத்து

வெள்ளத்தைச் சாதாரணமாகக் கருத வேண்டாம்: துணைப்பிரதமர் நினைவுறுத்து