Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெ.30 ஆயிரம் கொள்ளையிட்டதாக இரு இந்தோனேசிய பிரஜைகள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வெ.30 ஆயிரம் கொள்ளையிட்டதாக இரு இந்தோனேசிய பிரஜைகள் மீது குற்றச்சாட்டு

Share:

பட்டர்வொர்த், ஜூன் 21-

உள்ளூரை சேர்ந்த பெரியவர் ஒருவருக்கு சொந்தமான 30,000 வெள்ளி ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டு தப்பி சென்றதாக இரண்டு இந்தோனேசிய ஆடவர்கள் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

35 வயது அரி குஸ்தியவான் மற்றும் 41 வயது ரிப்கி ஆகியோர் நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவ்விருவரும் ஒப்புக் கொண்டனர்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 395 ஆவது பிரிவின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மே 30 ஆம் தேதி மாலை 3.20 மணியளவில் பட்டர்வொர்த், புக்கிட் மெர்டாஜாம், பண்டார் பெர்டா -வில் உள்ள ஒரு நிறுவனத்தில் 65 வயது பெரியவர் ஒருவரிடம் இக்குற்றத்தை புரிந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்