சிகமாட், நவம்பர்.04-
ஜோகூர், சிகமாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியாவின் ஒத்துழைப்புடன் கனிம மற்றும் பூவியியல் இலாகா அந்நகரில் ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது.
ஆகக் கடைசியாக சிகமாட்டில் ஏற்பட்ட நில அதிர்வின் தன்மையை மதிப்பீடு செய்யவும், தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ளதாக அந்த இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 7.55 மணிக்கு சிகமாட்டில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 2.7 ஆகப் பதிவுச் செய்யப்பட்டது. இது மிதமான நில அதிர்வு என்றாலும் நடப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.








