Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்ட மாது கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்ட மாது கைது

தைப்பிங், டிச. 27-

மாதாந்திர தவணைப்பணம் செலுத்த தவறியதற்காக இழுக்க வந்த தனது மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டு, நாசவேலையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த மோட்டார் சைக்கிளை இழுக்க வந்த நபர், செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து பேரா, தைப்பிங்கைச் சேர்ந்த அந்த மாது கைது செய்யப்பட்டார்.

தனது மோட்டார் சைக்கிளை இழுத்து செல்வதிலிருந்து தடுப்பதற்கு மோட்டார் சைக்கிளுக்கு அந்த மாது தீயிடும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த மாது தற்போது, குற்றவியல் சட்டம் 345 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நாஸிர் இஸ்மாயில் தெரிவித்தார்.

அதிருப்தியின் காரணமாக அந்த மாது இந்த நாசவேலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் நாஸிர் மேலும் கூறினார்.

இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சூப்ரிண்ட். ஹாஜி சுல்கிப்லி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்