கோலாலம்பூர், நவம்பர்.10-
பெட்டாலிங் ஜெயாவில் பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் மீண்டும் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அந்த பாதிரியார் காணாமல் போனதற்கு போலீஸ் துறையும், அரசாங்கமும் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கடந்த வாரம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஏற்ப இவ்விவகாரம் குறித்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவர் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவாக இருப்பால் அந்த ஆணையை அமல்படுத்த வேண்டிய கடப்பாட்டை அரசாங்கமும், போலீஸ் துறையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று புத்ராஜெயாவில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக மனிதக் கடத்தல் தடுப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.








