May 21, 2026
Thisaigal NewsYouTube
இ மடானி 100 வெள்ளித் தொகையை மக்கள் பெறத் தொடங்கினர்
தற்போதைய செய்திகள்

இ மடானி 100 வெள்ளித் தொகையை மக்கள் பெறத் தொடங்கினர்

Share:

21 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் இ மடானி திட்டத்தின் கீழ் 100 வெள்ளி தொகையை கடந்த திங்கட்கிழமை முதல் தங்களின் e-wallet அல்லது மின்னியில் பணப்பை வாயிலாக பெறத் தொடங்கியுள்ளனர்.

இந்த 100 வெள்ளித் தொகை உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவாசியப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த 100 வெள்ளி e-wallet தொகையை மருந்தகங்களில் அடிப்படை மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு தாம் பயன்படுத்தவிருப்பதாக இத்தொகையை பெற்ற ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஒரு முறை வழங்கக்கூடிய இந்த 100 வெள்ளி e-wallet தொகையின் மூலம் ஒரு கோடி மக்கள் பயன்பெறவிருப்பதாக நிதி அமைச்சு கடந்த வாரம் அறிவித்து இருந்தது.

Related News