கோலாலம்பூர், ஜூலை.23-
இம்மாதம் தொடங்கி 85 விழுக்காடு பயனீட்டாளர்கள் மின்சார பில்லுக்கான கட்டணக் குறைப்புச் சலுகையைப் பெறுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
தங்களுக்கான மின்சாரக் கட்டண நிர்ணய முறையில் அவர்கள் 14 விழுக்காட்டிற்கும் கூடுதலானக் கட்டண கழிவு அனுகூலத்தைப் பெறுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.








