Oct 9, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: பேராக்கில் மூன்று மாவட்டப் பள்ளிகள் உடனடியாக மூடல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: பேராக்கில் மூன்று மாவட்டப் பள்ளிகள் உடனடியாக மூடல்

புகைமூட்டம் காரணமாக, பேராக் மாநிலத்தின் கிந்தா உத்தாரா, கிந்தா செலாத்தான், கோலா கங்சார் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும், கல்விக் கழகங்களும் இன்று உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈப்போவின் தாசேக் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 182 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பேராக் மாநிலக் கல்வித் துறை இயக்குநர் ஸுல்கிஃப்லி முஹமட் மொக்தார் கூறுகையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →