பாஸ் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் ஹராகா டேலி பத்திரிகை, இஸ்ரேல் கொடியுடன் தமது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் செயலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடினார்.இது அறிவிலித்தனமாக செயலாகும். பொது மக்கள் முன்னிலையில் சமயத்திற்கு போராடுவதாக கூறும் ஒரு மதவாத கட்சியின் பத்திரிகையில் இஸ்ரேல் கொடியுடன் தமது புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். இச்செயலை அந்தப் பத்திரிகை செய்து இருக்கக்கூடாது என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
"பாலஸ்தீனத்திற்கு அன்வார் ஆதரவா? சந்தேகமே" என்ற தலைப்பில் இஸ்ரேல் கொடியுடன் அன்வாரின் புகைப்படத்தை ஹராகா டேலி வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.








