பெட்டாலிங் ஜெயா, ஜாலான் புக்கிட் காசிங்கில் உள்ள குழந்தை காப்பகம் ஒன்றின் முன்பு இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, 20 வயது மதிக்கத்தக்க இரு பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனையில் அக்குழந்தை கருச்சிதைவு காரணமாக உயிரிழந்ததும், மீட்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அது இறந்துவிட்டதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரு பெண்கள் மீதும் இதற்கு முன் குற்றப் பின்னணி ஏதும் இல்லை என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஷம்சுடின் மாமட் தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பாக, முதல் சந்தேக நபருக்கு நாளை ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், இரண்டாவது சந்தேக நபருக்கு ஜூன் 15 ஆம் தேதி திங்கட்கிழமை வரையிலும் தடுப்புக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறப்பை மறைத்து உடலை ரகசியமாக வீசிய குற்றத்திற்காக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ஷம்சுடின் மாமட் குறிப்பிட்டார்.








