Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பொய் வதந்திகளைத் தடுக்க சமூக ஊடகத் தளங்களுடன் மலேசிய ஊடகக் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்த ஃபஹ்மி பரிந்துரை
தற்போதைய செய்திகள்

பொய் வதந்திகளைத் தடுக்க சமூக ஊடகத் தளங்களுடன் மலேசிய ஊடகக் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்த ஃபஹ்மி பரிந்துரை

Share:

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களின் போது பொய் வதந்திகள் பரவுவதைத் தடுக்க, சமூக ஊடகத் தளங்களுடன் மலேசிய ஊடகக் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் பரிந்துரைத்துள்ளார்.

உள்நாட்டு ஊடகங்களின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்திப் போலிச் செய்திகள் பரப்பப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ள டத்தோ ஃபஹ்மி , இதற்கு எதிராக ஊடகக் கவுன்சிலுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறினார். இத்தேர்தல்களின் போது போலிச் செய்திகளை எதிர்கொள்வது குறித்த சிறப்புத் திட்டம் வரவிருக்கும் தேசிய பத்திரிகையாளர் தினமான ஹவானாவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நெகிரி செம்பிலானில் உள்ள 62 தேசிய தகவல் பரவல் மையங்கள் மூலமாக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவை நெறிமுறையோடு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related News