Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஹமிடிக்கு ஜசெக இளைஞரணி பதிலடி: "நாங்கள் மிரட்டலுக்குப் பணியும் அடிமைகள் அல்ல
தற்போதைய செய்திகள்

ஹமிடிக்கு ஜசெக இளைஞரணி பதிலடி: "நாங்கள் மிரட்டலுக்குப் பணியும் அடிமைகள் அல்ல

Share:

தங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் அறிவுரைக்கு, ஜசெக தேசிய இளைஞரணியான டாப்சியின் தலைவர் வூ கா லியோங் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

கூட்டணி அரசாங்கத்தின் ஒற்றுமை உணர்வை அம்னோ தலைவர்களே பலமுறை சீர்குலைத்துள்ளதால், அரசியல் கூட்டாளிகளை மதிப்பது குறித்துப் பேச ஜாஹிட் ஹமிடிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று வூ கா லியோங் சாடினார்.

அம்னோவின் சொற்படி மூக்கனாங்கயிறு இடப்பட்ட மாடுகளைப் போல நடக்கும் மசீச அல்லது மஇகா இளைஞரணிகளைப் போன்றவர்கள் தாங்கள் அல்ல என்றும், மக்களின் நலனுக்காக ஜசெக இளைஞரணி தொடர்ந்து வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் என்றும் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வூ கா லியோங் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Related News