Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பணிப்பெண்ணை முதலாளி தாக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்: ஜோகூர் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

பணிப்பெண்ணை முதலாளி தாக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்: ஜோகூர் போலீஸ் விசாரணை

Share:

தங்களின் வீட்டுப் பணிப்பெண்ணை தம்பதியர் ஒருவர் கொடூரமாக அடித்து, முகத்தில் குத்தும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

அவ்வீடியோவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் பணிப்பெண்ணை ஒரு ஆடவர் சரமாரியாகத் தாக்கும்போது, அந்தப் பெண் அழுதுகொண்டே கெஞ்சுவதும், எனினும் அவர் தொடர்ந்து தாக்கப்படுவதும் பதிவாகியுள்ளது.

பணிப்பெண் தவறு செய்திருந்தாலும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இவ்வாறு மிருகத்தனமாகத் தாக்கக் கூடாது என்று நெட்டிசன்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் கூறுகையில், இந்த வீடியோ தொடர்பாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்த உளவுத்துறை விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

Related News