Nov 15, 2026
Thisaigal NewsYouTube

வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பைக் கட்டாயமாக்க அரசாங்கம் பரிசீலனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பைக் கட்டாயமாக்க அரசாங்கம் பரிசீலனை

மோசடி அழைப்புகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கும் நோக்கில், வாட்ஸ்அப் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைச் சரிபார்ப்பதைக் கட்டாயமாக்குவது குறித்து மலேசிய அரசாங்கம் ஆய்வு செய்து வருகின்றது.

தற்போது வாட்ஸ்அப் கணக்குகளுக்கு இத்தகைய தொலைபேசி எண் சரிபார்ப்பு கட்டாயமில்லை எனத் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

மேலும், அழைப்பாளர் அடையாள எண்ணை மாற்றிக் காட்டும் மோசடிகளைக் கட்டுப்படுத்த, எம்சிஎம்சி எனப்படும் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மோசடியாளர்கள் புதிய வழிகளைக் கையாளத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், எம்சிஎம்சி அதிகாரிகள் போல் நாடகமாடி மோசடியில் ஈடுபட்டதாக 61 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →