கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 1,387 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டன.
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் மற்றும் பொது சாலைகளில் நடத்தப்படும் வேகச் சோதனைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜேபிஜே எனப்படும் சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 42A-இன் கீழ் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிரிவு 42A அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இது போன்ற பெரிய அளவிலான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் ஏடி ஃபாட்லி ரம்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், இந்த சோதனையில் 17 வயது எஸ்பிஎம் மாணவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








