மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான நல்லுறவு தொடர்ந்து பேணப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சில கொள்கைகளுடன், குறிப்பாக காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் மலேசியாவுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அந்நாட்டுடனான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளைப் பாதுகாப்பது அவசியம் என்றார்.
சீனாவுடனான வர்த்தக உறவும் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் கூகுள் நிறுவனம் மலேசியாவில் 61 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய அறிவித்ததையும் சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூரில் பிஎல்கேஎன் 3.0 தேசிய இளம் வீரர்களுடனான சந்திப்பில் உரையாற்றியபோது, நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வகையில் வெளிநாட்டு உறவுகள் சமநிலையுடன் பேணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








