Nov 14, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பு – 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் உதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பு – 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் உதவி

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் சுங்கை பூலோவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிப் பொருட்களை வழங்கினார். பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள், கலாசாரங்களை நாம் கொண்டிருந்தாலும், வெள்ளம் போன்ற இடர்களை சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மலேசியர்கள் அனைவரும் மனிதநேயத்தாலும் பரஸ்பர மரியாதையாலும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒருவரையொருவர் மதித்து, அன்புடன் பழகும் குடும்ப உணர்வுதான் மலேசியாவின் பலம் என்றும், அந்த ஒற்றுமையே நாட்டின் எதிர்கால வெற்றிக்கு அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் எச்ஆர்டி கோர்ப் அமைப்பு, 'சந்துனி காசே மடானி’ திட்டத்தின் வழியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது. மின்சார அடுப்பு, எரிவாயு அடுப்பு, அரிசி சமைக்கும் சாதனம், மின்சாரக் கெண்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் எரிவாயு கலன்களும் இதில் அடங்கும்.

கம்போங் மெலாயு சுபாங், குபு காஜா, பாயா ஜெராஸ் உள்ளிட்ட ஏழு பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் இந்த உதவியால் பயனடைந்துள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, தங்களை பதிவு செய்து கொண்ட மக்களுக்கு தலா 2,500 ரிங்கிட் வழங்குவதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதி ஒதுக்கியிருப்பதாக டத்தோ ஸ்ரீ ரமணன் விளக்கினார்.

இத்தகைய உதவி திட்டத்தை முன்னெடுத்த எச்ஆர்டி கோர்ப், அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முஹமட் ஷாமிர் அப்துல் அஸிஸ் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய கிராமத் தலைவர்கள், போலீஸ் துறை, பொது தற்காப்பு படையினர் அனைவருக்கும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டத்தோ ஸ்ரீ ரமணன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

திறந்த இல்ல உபசரிப்பு ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் – ஒற்றுமைத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

திறந்த இல்ல உபசரிப்பு ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் – ஒற்றுமைத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

காஜாங்கில் வீட்டின் மேல்மாடியில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

காஜாங்கில் வீட்டின் மேல்மாடியில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

தீபாவளி ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்! இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், கோயில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் – பிரதமர் அன்வார் உறுதி!

தீபாவளி ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்! இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், கோயில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் – பிரதமர் அன்வார் உறுதி!

பந்திங்கில் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக மகன் கைது – 7 நாட்கள் தடுப்புக் காவல்!

பந்திங்கில் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக மகன் கைது – 7 நாட்கள் தடுப்புக் காவல்!