Nov 14, 2026
Thisaigal NewsYouTube

திறந்த இல்ல உபசரிப்பு ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் – ஒற்றுமைத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திறந்த இல்ல உபசரிப்பு ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் – ஒற்றுமைத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

திறந்த இல்ல உபசரிப்பு, ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்தல், அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணுதல் ஆகியவை பண்டிகைக் காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பண்பாடாக மாற வேண்டும் என்று தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய நடைமுறைகள் பல இன மக்களிடையே சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் பாலமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இன்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு இனங்களின் கலாசார மற்றும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

மதம், மொழி, கலாசாரம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும், மலேசியர்கள் அனைவரும் ஒரே நாட்டையும் அரசியலமைப்பையும் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்ட டத்தோ ஆரோன் அகோ டாகாங், புரிந்துணர்வு, மரியாதை, ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை தேசிய ஒற்றுமையின் அடிப்படைகளாக இருக்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →