Nov 14, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

மலேசியா ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகளை எதிர்கொண்டு வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வழக்கமான ராணுவத் தாக்குதல்களுடன் நின்றுவிடவில்லை என்றும், இணையவழித் தாக்குதல்கள், கணினி அமைப்புகளுக்குள் ஊடுருவுதல் மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் நடமாட்டம் ஆகியவையும் முக்கியச் சவால்களாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை எதிர்கொள்ளும் வகையில், ஆயுதப்படைகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி, இணையப் பாதுகாப்புப் பிரிவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக அவர் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள 515ஆவது பிராந்திய ராணுவப் படை முகாமில், தேசிய சேவைப் பயிற்சித் திட்டமான பிஎல்கேஎன் 3.0 இளைஞர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ட்ரோன் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு முறைகளிலும் மலேசியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பு – 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் உதவி

சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பு – 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் உதவி

திறந்த இல்ல உபசரிப்பு ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் – ஒற்றுமைத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

திறந்த இல்ல உபசரிப்பு ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் – ஒற்றுமைத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

காஜாங்கில் வீட்டின் மேல்மாடியில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

காஜாங்கில் வீட்டின் மேல்மாடியில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

தீபாவளி ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்! இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், கோயில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் – பிரதமர் அன்வார் உறுதி!

தீபாவளி ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்! இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், கோயில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் – பிரதமர் அன்வார் உறுதி!

பந்திங்கில் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக மகன் கைது – 7 நாட்கள் தடுப்புக் காவல்!

பந்திங்கில் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக மகன் கைது – 7 நாட்கள் தடுப்புக் காவல்!