கெடா மாநிலத்தின் உள்பகுதியான பெலான்டிக்கில், மலேசியா–தாய்லாந்து இடையே புதிய எல்லை நுழைவாயிலை அமைப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர் இதனைத் தெரிவித்தார்.
பெடு ஏரிக்கரையில் புதிதாக உருவாக்கப்பட்ட மோங் காஜா பொழுதுபோக்குப் பூங்காவைப் பார்வையிட்டபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இந்தப் புதிய நுழைவாயில், தெக்கி பாதை அல்லது பாடாங் சானாயிலிருந்து பாலிங் பத்து 42 வரை செல்லும் கிழக்கு கெடா, உள்ளூர் சாலையுடன் இணைக்கப்படலாம் என சனூசி குறிப்பிட்டார்.
எனினும், இத்திட்டத்தின் இறுதி முடிவு, துல்லியமான இடம் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து இன்னும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தற்போது மலேசியா–தாய்லாந்து இடையே தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் ஏழு சாலை வழி எல்லை நுழைவாயில்கள் செயல்பட்டு வருகின்றன.








