நாட்டிற்குள் சட்டப்பூர்வமாக நுழையும் சில வெளிநாட்டினர், மாணவர் அனுமதி மற்றும் சமூகப் பயண அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தி, அனுமதிக் காலம் முடிந்த பின்னரும் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்குவதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் கூறுகையில், சில தனிநபர்கள் வெளிநாட்டினருக்குத் தங்குமிட வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுப்பதாகத் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் 11,808 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1,55,498 பேர் சோதனை செய்யப்பட்டதுடன், 70,195 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களின் இருப்பிடங்களைக் கண்டறியப் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் குடிநுழைவுத் துறைக்குத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.








