Nov 14, 2026
Thisaigal NewsYouTube

பேராக் மாநில தீபாவளிக் கொண்டாட்டம் – 15 ஆயிரம் மக்களுடன் இணைந்த சுல்தான் நஸ்ரின்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் மாநில தீபாவளிக் கொண்டாட்டம் – 15 ஆயிரம் மக்களுடன் இணைந்த சுல்தான் நஸ்ரின்

பேராக் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தில் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா, பேராக் ராஜா பெர்மைசூரி துவாங்கு ஸாரா சாலிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈப்போவிலுள்ள இந்திரா முலியா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 15 ஆயிரம் பேர் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களுடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஆறு கருணை இல்லங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளைச் சேர்ந்த 69 ஆதரவற்ற குழந்தைகளுக்கு சுல்தான் நஸ்ரின் நிதியுதவி வழங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய பேராக் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சாரணி முஹமட், மனிதநேயம், அன்பு, பிறரைப் புரிந்து கொள்ளும் மனப்பான்மை ஆகியவையே சிறந்த சமூகத்தின் அடையாளங்கள் என்றார்.

மேலும், பேராக் மாநிலத்தின் வளர்ச்சியில் இந்தியச் சமூகத்தின் பங்களிப்பைச் சுட்டிக் காட்டிய அவர், தோட்டங்கள், ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகங்கள் உருவாக்கத்தில் இந்தியர்கள் ஆற்றிய பணி மறக்க முடியாதது என்றார்.

நாட்டிலேயே அதிகமாக 134 தமிழ்ப்பள்ளிகளைக் கொண்ட மாநிலம் பேராக் என்பதையும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அமெரிக்கா, சீனாவுடன் நல்லுறவு தொடரும் – பொருளாதார நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அன்வார் உறுதி!

அமெரிக்கா, சீனாவுடன் நல்லுறவு தொடரும் – பொருளாதார நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அன்வார் உறுதி!

கெடாவில் புதிய மலேசியா–தாய்லாந்து எல்லை நுழைவாயில் – பெலான்டிக்கில் அமைக்கத் திட்டம்

கெடாவில் புதிய மலேசியா–தாய்லாந்து எல்லை நுழைவாயில் – பெலான்டிக்கில் அமைக்கத் திட்டம்

மாணவர், சமூகப் பயண அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தங்கும் வெளிநாட்டினர்

மாணவர், சமூகப் பயண அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தங்கும் வெளிநாட்டினர்

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

மலேசியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் – பிரதமர் அன்வார் எச்சரிக்கை

அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

அனைத்து கைதிகளுக்கும் மன்னிப்புக் கோர உரிமை உண்டு – உள்துறை அமைச்சர் விளக்கம்

சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பு – 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் உதவி

சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பு – 1,500 குடும்பங்களுக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் ரிங்கிட் உதவி